திருகோணமலையில் தீப்பற்றிய தேசிய சேமிப்பு வங்கி!

திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியொன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீ அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை தீ பரவலானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் குறித்த தேசிய சேமிப்பு வங்கியின் அருகில் எரிபொருள் நிரப்பும் நிலையமொன்று உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது